மதுரை விமான நிலையத்தில் பேட்டியளித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, எல்.கே.ஜி., யூ.கே.ஜி. வகுப்புகளுக்கு விடுமுறைதான் என விளக்கம் அளித்துள்ளார்.
மாண்புமிகு முதலமைச்சர் பழனிசாமி பேட்டி
மதுரை:
மதுரை விமான நிலையத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
எல்.கே.ஜி., யூ.கே.ஜி. வகுப்புகளுக்கு அறிவிக்கப்பட்டபடி மழலையர் பள்ளிகளுக்கு விடுமுறை தான், முறையான அறிவிப்பு நாளை வெளியாகும்.
கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து மூத்த அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினோம். கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து விரைவில் அறிக்கை வெளியிடப்படும்.
(தமிழகத்தில் மழலையர் பள்ளிகளுக்கு மார்ச் 16 முதல் 31-ம் தேதி வரை நேற்று விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது இன்று திடீரென நிறுத்தி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.)
No comments:
Post a Comment