வேண்டுகோள்
07.03.2020
~~~~~~~~
கொரோனா வைரஸ் காரணமாக அலுவலகங்கள் பள்ளிகளில் பயோமெட்ரிக் வருகை பதிவு முறைக்கு மத்திய அரசு விலக்களித்தது போன்று
தமிழக அரசும் ஆசிரியர்கள் அரசு ஊழியர்களுக்கும் பயோமெட்ரிக் வருகை பதிவு முறைக்கு தற்காலிகமாக விலக்கு அளிக்க தமிழக அரசு உத்தரவிட
தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு சார்பில் வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்
===========
இந்தியாவிலும் கொரோனா வைரஸ் பரவிவரும் சூழ்நிலையில் மத்திய அரசு அலுவலகங்களில் மார்ச் 31-ம் தேதி வரை பயோமெட்ரிக் முறைக்கு விலக்கு அளித்து
ஊழியர்கள் ஆசிரியர்கள் வருகை பதிவேடுகளில் மட்டும் தங்களது வருகையை பதிவு செய்ய மத்திய அரசு கீழ் உள்ள அனைத்துத்துறை அலுவலங்களுக்கு உத்தரவிட்டுள்ளது
கொரோனா வைரஸ் விரல்கள் மூலம் அதிகம் பரவும் என்பதால் மத்திய அரசு ஊழியர்களுக்கு பயோமெட்ரிக் வருகை பதிவு முறையை தற்காலிகமாக நிறுத்தி உள்ளது, காரணம் பயோமெட்ரிக் கருவியில் அடுத்தடுத்து தொடர்ந்து கைவிரல்கள் பதிவிடுவதால் வைரஸ் பரவக்கூடும் என்பதால் தற்காலிகமாக பயோமெட்ரிக் வருகை பதிவிற்கு விலக்களித்ததை போன்று தமிழக அரசும் கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பயோமெட்ரிக் வருகை பதிவை தற்காலிகமாக நிறுத்திவிட்டு வருகை பதிவேடு முறையை அலுவலகங்களில் பணியாற்றும்ஊழியர்கள் மற்றும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் பணியாளர்கள் பயன்படுத்த உத்தரவிட வேண்டுமென தமிழ்நாடு அரசு ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு சார்பில் கேட்டுக்கொள்கிறேன்
~~~~~~~~
சா.அருணன்
நிறுவனத் தலைவர்
தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு
9445454045


No comments:
Post a Comment