Saturday, 7 March 2020

தொடக்கக்கல்வி - ஊராட்சி / நகராட்சி / அரசு துவக்க / நடுநிலைப்பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மீது தமிழ்நாடு குடிமைப்பணி (ஒழுங்குமுறைகள் மற்றும் மேல்முறையீடு) விதிகளில் விதி 17(பி)-ன்படி ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டவர்கள் விவரம் கோருதல் - மேலும் தொடர் நடவடிக்கை எடுக்க அறிவுறுத்துதல் சார்ந்த







தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள், சென்னை 6

ந.க.எண்.3690/ E1/2020

நாள்.06.03.2020

பொருள்

தொடக்கக்கல்வி - ஊராட்சி / நகராட்சி / அரசு துவக்க / நடுநிலைப்பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மீது தமிழ்நாடு குடிமைப்பணி (ஒழுங்குமுறைகள் மற்றும் மேல்முறையீடு) விதிகளில் விதி 17(பி)-ன்படி ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டவர்கள் விவரம் கோருதல் - மேலும் தொடர் நடவடிக்கை எடுக்க அறிவுறுத்துதல் சார்ந்த

பார்வை

தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்.3690/E1/2020 நாள்.27.02.2020

பார்வையில் காணும் இயக்குநரின் செயல்முறைகளில் இவ்வியக்கக கட்டுப்பாட்டில் உள்ள ஊராட்சி / நகராட்சி / அரசு துவக்க / நடுநிலைப்பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் மீது தமிழ்நாடு குடிமைப்பணி (ஒழுங்கு முறைகள் மற்றும் மேல்முறையீடு) விதிகளில் விதி 17(பி)-ன்படி ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டவர்கள் பெயர், விவரம், விசாரணை அலுவலர் நியமனம் செய்யப்பட்ட விவரம், விசாரணை அறிக்கை பெறப்பட்ட விவரம் மற்றும் இறுதி ஆணை வழங்கப்பட்ட விவரங்களை குறிப்பிட்ட படிவத்தில் பூர்த்தி செய்து 02.03.2020-க்குள் மின்னஞ்சல் மூலம் அனுப்புமாறு அனைத்து வட்டாரக் கல்வி அலுவலர்களிடம் கோரப்பட்டது. ஆனால் இதுநாள் வரை முழுமையான விவரங்கள் அனைத்து மாவட்டங்களிலிருந்தும் பெறப்படவில்லை.

எனவே தங்கள் மாவட்டத்தில் ஊராட்சி நகராட்சி அரசு தொடக்கப்பள்ளி நடுநிலைப்பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள் மீது 17(பி) குற்றச்சாட்டு சுமத்தப்பட்டிருப்பின் அவர்களுக்கு உரிய கிடைக்கப்பெற்ற இரண்டு வாரங்களுக்குள் நியமனம் செய்து விசாரணை அறிக்கையினைப் பெற அறிவுறுத்தப்படுகிறது. மேலும், விசாரணை அறிக்கையில் குற்றச்சாட்டு நிரூபணமானால் கூடுதல் தன்னிலை விளக்கம் பெற்று இறுதி ஆணை வழங்க துரித நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களும் அறிவுறுத்தப்படுகிறார்கள். விசாரணை அலுவலரை இச்செயல்முறைகள்

விசாரணை அலுவலர் நியமனம் செய்வதில் காலதாமதம் ஏற்படுவதால் தனியர்கள் ஓய்வு பெறும் நாளில் ஓய்வு பெற அனுமதிக்க இயலாத நிலை ஏற்படுகிறது. எனவே மாவட்டக் கல்வி அலுவலர்கள் இப்பொருளில் தனிகவனம் செலுத்தி விரைவு நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.

தொடக்கக் கல்வி இயக்குநர்

பெறுநர் :
அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்கள் நகல் -

 அனைத்து முதன்மைக்கல்வி அலுவலர்கள்.

No comments:

Post a Comment