Friday, 15 May 2020

பத்தாம் வகுப்பு தேர்வை பஞ்சாப்,ஜார்கண்ட், மாநிலங்கள் ரத்து செய்துள்ளது. தெலுங்கானா, ஆந்திரா மாநிலங்கள் கொரோனா பிரச்சினைக்கு பிறகு தேர்வுகள் நடைபெறும் என்று ஒத்திவைத்துள்ளது. இதை கருத்தில் கொண்டு தமிழக அரசு மறுபரிசீலனை செய்ய தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.





தமிழக அரசு பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை ஜூன் ஒன்றாம் தேதி முதல் பனிரெண்டாம் தேதி வரை நடைபெறும் என்று அறிவித்து அதற்கான அட்டவனையை அறிவித்து தற்போது சமூக இடைவெளியை கடைப்பிடிக்கும் விதமாக மாணவர்கள் பயிலுகின்ற பள்ளிகளிலேயே எழுத மையங்களை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது பள்ளிக்கல்வித்துறை

தமிழ்நாடு அரசு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு சார்பில் மற்ற மாநிலங்களை பின்பற்றி பத்தாம் வகுப்பு தேர்வை ஏற்கனவே பள்ளிகளில் நடந்த காலாண்டு அரையாண்டு மற்றும் திருப்புதல் தேர்வுகளின் அடிப்படையில் மாணவர்கள் தேர்ச்சியை அறிவிக்க கோரிக்கை வைத்தோம் அதே தேர்வு நடக்கும் பட்சத்தில் பல மையங்களில் 7 ற்கும் பள்ளி மாணவர்கள் ஒரே மையத்தில் தேர்வு எழுத உள்ளனர் இதனால் சமூக இடைவெளியை கடைப்பிக்க முடியாத நிலை ஏற்படும் இதன் காரணமாக யாருக்காவது ஒருவருக்கு தொற்று ஏற்பட்டால் பலருக்கும் பரவ வாய்ப்புள்ளது என்பதை சுட்டி காட்டி சமூக இடைவெளியை கடைப்பிக்க விதமாக மாணவர்கள் பயிலுகின்ற பள்ளியிலேயே தேர்வு மையத்தை ஏற்படுத்தி மாணவர்கள் தேர்வு எழுத ஏற்பாட்டை மேற்கொள்ள அரசிற்கு கோரிக்கைவைத்தோம் பரிசீலனை செய்து அந்தந்த பள்ளிகளிலேயே தேர்வுகள் நடத்த முடிசெய்து உள்ளது , அதே நேரத்தில் பஞ்சாப் ஜார்கண்ட மாநில அரசு பத்தாம் வகுப்பு பொது தேர்வை ரத்து செயதுள்ளது அதே போன்று தெலுங்கான ஆந்திரா மாதிலங்கள் பத்தாம் வகுப்பு தேர்வை ஒத்திவைத்து கொரோனா பிரச்சனக்கு பிறகு நடைபெறும் என்று அறித்தத்தை கருத்தில் தமிழக மறுபரிசீலனை செய்ய தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு சார்பில் வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன்

சா.அருணன்
நிறுவனத் தலைவர்
தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு
9445454044



No comments:

Post a Comment