Wednesday, 4 March 2020

மூன்று நாளில் 29 பேருக்கு கொரோனா பாதிப்பு: இந்தியா முழுவதும் அலர்ட் பிரதமர் அமைச்சர்கள் ஹோலி கொண்டாட்டம் ரத்து விமான நிலையங்களில் எல்லா பயணிகளுக்கும் பரிசோதனை பள்ளிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை உத்தரவு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு சுற்றறிக்கை






மூன்று நாளில் 29 பேருக்கு கொரோனா பாதிப்பு:
இந்தியா முழுவதும் அலர்ட்
பிரதமர் அமைச்சர்கள் ஹோலி கொண்டாட்டம் ரத்து
விமான நிலையங்களில் எல்லா பயணிகளுக்கும் பரிசோதனை
பள்ளிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை உத்தரவு
மாநில அரசுகளுக்கு மத்திய அரசு சுற்றறிக்கை

உலகையே உலுக்கிக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் பரவ தொடங்கியுள்ளது மூன்று நாளில் இத்தாலி சுற்றுலா பயணிகள் 16 பேர் உட்பட 29 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது இதனால் நாடு முழுவதும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது விமான நிலையங்களில் அனைத்து பயணிகளுக்கும் பரிசோதனை செய்யப்படுகிறது பள்ளிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க மாநில அரசுகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது கொரோனாபீதியால் ஜனாதிபதி பிரதமர் மற்றும் அமைச்சர்களின் ஹோலி கொண்டாட்டங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
சீனாவின் ஷூபெய் மாகாணம் நகரில் பரவத் தொடங்கிய கோவிட் 19 எனப்படும் கொரோனாவைரஸ் உலகம் முழுவதும் பரவி பல உயிர்களை பலி கொண்டு வருகிறது சீனாவில் இருந்து திரும்பிய 3 மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு இருந்தாலும் அவர்கள் சிகிச்சைக்கு பின் குணமடைந்ததால் இந்தியாவில் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படவில்லை ஆனாலும் கொரோனா பாதிப்புள்ள நாடுகளிலிருந்து வருபவர்களிடம் முக்கிய விமான நிலையங்களில் பரிசோதனை செய்யப்பட்டு வந்தது இதற்கிடையே இத்தாலியில் இருந்து திரும்பிய டெல்லியைச் சேர்ந்த ஒருவருக்கும் துபாயில் இருந்து பெங்களூர் வந்த ஹைதராபாத் சாப்ட்வேர் இன்ஜினியர் ஒருவருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது கடந்த திங்கட்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது அதை தொடர்ந்து டெல்லி நபரின் உறவினர்களான ஆக்ராவை சேர்ந்த 6 பேருக்கு கொரோனா பாதித் இருப்பதாக நேற்று முன்தினம் தகவல் வெளியானது.
இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூருக்கு சுற்றுலா வந்த இத்தாலிய நாட்டைச் சேர்ந்த 16 பேர் மற்றும் அவர்களுடன் இருந்த இந்தியாவைச் சேர்ந்த கார் டிரைவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதாக நேற்று தகவல் வெளியானதால் பெரும் பீதி ஏற்பட்டுள்ளது அத்தோடு டெல்லியைச் சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் ஒருவருக்கும் வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதியானது இதனால் வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 29 ஆக அதிகரித்துள்ளது.

இத்தாலி நாட்டில் இருந்து 21 சுற்றுலா பயணிகள் மற்றும் அவர்களுக்கு வழிகாட்டியாக மூன்று இந்தியர்கள் ஒரு குழுவாக ஜெய்ப்பூரில் தங்கி இருந்தனர் அவர்களில் இத்தாலியை சேர்ந்த 69 வயது உடையவருக்கு கொரோனாவைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது பின்னர் அவரது மனைவிக்கும் பாதிப்பு இருப்பது தெரிய வந்தது அதன் தொடர்ச்சியாக தற்போது இத்தாலி பயணிகள் 14 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது அவர்களுடன் இருந்த டிரைவருக்கும் வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது பாதிக்கப்பட்ட அந்த தம்பதி ஜெய்ப்பூர் சுவாமி மான் சிங் மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர் மீதமுள்ளவர்கள் டெல்லியிலுள்ள ஐடிபிடி முகாமில் உள்ள தனி சிகிச்சை மையத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர் வெளிநாட்டு பயணிகள் மூலமாக கொரோனா பரவியிருப்பதால் நாடு முழுவதும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வைரஸ் பாதிப்பு இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது அவர்களுடன் சேர்ந்த நபர்கள் இத்தாலி சுற்றுலா பயணிகள் பல்வேறு இடங்களுக்கு சென்று உள்ளனர் இவர்கள் மூலமாக மேலும் பலருக்கு வைரஸ் பரவி இருக்கலாம் என்ற அச்சம் நிலவுகிறது குறிப்பாக டெல்லியில் பல பேருக்கு வைரஸ் தொற்று இருக்கக்கூடும் என பீதி நிலவுகிறது இதனால் இவர்கள் தொடர்பு கொண்டவர்களும் பரிசோதிக்க அந்தந்த மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து வருகின்றன இதுவரை கொரோனாபாதித்த 12 நாடுகளைச் சேர்ந்த விமான பயணிகளிடம் மட்டுமே பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது 3 நாளில் 29 பேருக்கு வைரஸ் தாக்கி இருப்பதால் இனி அனைத்து விமான பயணிகளும் பரிசோதனைக்குப் பின்னரே வெளியேற அனுமதிக்கப்படுவார்கள் என மத்திய அரசு அதிரடியாக அறிவித்துள்ளது இதற்கிடையே பிரதமர் மோடி தலைமையில் அனைத்து அமைச்சக உயர் அதிகாரிகள் மட்டத்திலான அவசர கூட்டம் டெல்லியில் நேற்று நடந்தது இதில் மாநில அரசுகளுடன் இணைந்து மேற்கொள்ள வேண்டிய தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது மேலும் வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மருத்துவ ஏற்பாடுகள் வைரஸ் பரவுவதை தடுக்க பொது மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவது குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது விரைவில் அனைத்து மாநில அரசுகளுடன் ஆன கூட்டத்திற்கு ஏற்பாடு செய்ய முடிவு எடுக்கப்பட்டுள்ளது
கொரோனா வைரஸ் பரவுவதால் ஒரே இடத்தில் பொதுமக்கள் அதிக அளவில் கூடுவதை தவிர்க்க அரசு வலியுறுத்தியுள்ளது இதன்காரணமாக ஜனாதிபதி பிரதமர் மற்றும் அமைச்சர்களின் ஹோலி கொண்டாட்டங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன டெல்லியை தொடர்ந்து ராஜஸ்தான் தெலுங்கானா மாநிலங்களில் வைரஸ் தொற்று பரவி இருப்பதால் பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது குறிப்பாக மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது சிபிஎஸ்இ 10,12 வகுப்பு பொதுத்தேர்வுக்கு மாணவர்கள் முக கவசம் கை சுத்தகரிப்பு கொண்டு வரவும் அரசு அனுமதி அளித்துள்ளது பல்வேறு மாநில அரசுகளுடன் வைரஸ் தடுப்பு நடவடிக்கையில் களமிறங்கி உள்ளனர்.
நன்றி: தினகரன் செய்தித்தாள்.

No comments:

Post a Comment