. CLICK HERE TO DOWNLOAD THE GO
*🌎🙋♂பள்ளிகளின் செயல்பாடுகளை கண்காணிக்க ஊராட்சி அளவில் புதிய குழு - தமிழக அரசு உத்தரவு*
*கிராம ஊராட்சி நிர்வாகத்திற்கு உதவிடும் வகையில் கிராம ஊராட்சி அளவில் கீழ்காணும் 5 குழுக்களை அமைப்பதற்கான வழிமுறைகளை வகுத்து பார்வையில் காணும் அரசாணையில் தமிழக அரசு உரிய உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.*
*கிராம ஊராட்சி நிர்வாக பணிகளை திறம்பட செயல்படுத்த தமிழக அரசு அறிவித்த 5 குழுக்கள் :*
*1. நியமனக்குழு*
*2.வளர்ச்சி குழு*
*3.வேளாண்மை*
*4. நீர்வள மேலாண்மை குழு*
*5. பணிகள் குழு*
*கல்விக் குழு*
*ஒவ்வொரு ஊராட்சியிலும் கல்விக் குழு ஒன்று அமைக்கப்படவேண்டும்.*
*இக்குழுவின் தலைவராக கீழ்க்காணும் ஐந்து உறுப்பினர்களுள் ஒருவரை கிராம ஊராட்சி மன்றம் தேர்வு செய்ய வேண்டும்.*
*உறுப்பினர்கள்*
*1. பெற்றோர் ஆசிரியர் சங்கப் பிரதிநிதி*
*2. சுய உதவிக் குழு பிரதிநிதி*
*3. அரசு சாரா அமைப்பைச் சார்ந்த பிரதிநிதி*
*4. உள்ளூர் தொடக்க அல்லது நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் / தலைமை ஆசிரியை*
*5. சத்துணவு அமைப்பாளர்*
*முக்கியமான பணிகள்*
*ஊராட்சிப் பகுதியில் உள்ள அனைத்து பள்ளிகளின் செயல்பாடுகளைக் கண்காணித்தல் பொது மக்களின் பங்களிப்புடன் பள்ளிகளின் அடிப்படை வசதிகள் மேம்பாடு அடைய செய்தல்.*
*அனைவருக்கும் கல்வி , முறை சாரா கல்வி , நூலக மேம்பாடு , எழுத்தறிவு மற்றும் கிராமப்புற மக்களிடையே படிக்கும் ஆர்வத்தை தூண்டுவதற்கான உத்திகளை வகுத்தல்.*
No comments:
Post a Comment