சென்னை, ஏப். 7: இல்லம் தேடி கல்வி, மருத்துவம் போன்று, இல்லம் தேடி கருவூலத் துறை சேவைகளை வழங்க நட வடிக்கை எடுப்போம் என்று நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார்.
சட்டப் பேரவையில் வியாழக்கிழமை கேள்வி நேரத்தின் போது, நன்னிலம் தொகுதியில் சார் கருவூல் அலுவலகத்துக்கு கட்டடம் கட்டித் தர வேண்டுமென உறுப்பினர் ஆர்.காமராஜ் கோரிக்கை விடுத்தார். இதற்கு அமைச்சர் பழனி வேல் தியாகராஜன் அளித்த பதில்:
அனைத்துத் துறைகளின் செலவுகளையும் கட்டுப்படுத்தும் துறை நிதித் துறை. எங்களது செலவையும் நாங்கள் கட்டுப்படுத்துவது கடமை. தமிழகத்தில் இணையதள வசதியைப் பயன்படுத்தும் நிலை 75 சதவீதம் உள்ளது. இங்குள்ள கணினிகளை சட்டப் பேரவை உறுப்பி னர் அலுவலகங்களில் வைத்து இணைய சேவை மையங்களாகச் செயல் படுத்தவும் ஆலோசித்து வருகிறோம். எந்தவொரு குடிமகனும் அலுவ லகம் தேடி வராத நிலையை உருவாக்குவதே எங்களது திட்டம்.
கட்டடம் கட்டுவதால் பல சிரமங்கள் ஏற்படுகின்றன. அந்தக் கட்ட டங்கள் 30 முதல் 40 ஆண்டுகளில் பாழடைந்து விடுகிறது. கட்டடம் கட்டுவது எளிது, பராமரித்தல் கடினம். கட்டடம் கட்டினாலும் ஊழி யர்களை பணியிடங்களில் நிரப்புவது சிரமமாக உள்ளது. பெரிய மாந கரங்களில் பணியிடங்கள் நிரம்புகின்றன. பின்தங்கிய பகுதிகளில் யாரும் வேலைக்குச் செல்வதில்லை. எனவே, வீட்டைத் தேடி சேவை களை கொண்டு சேர்க்க நாங்களோ அல்லது வங்கிகள் மூலமாகவோ நடவடிக்கைகள் எடுப்போம்.
அதேசமயம், நிலுவையில் உள்ள பணிகள் முடிக்கப்படும். புதிதாக கட்டடம் கட்ட சிந்தித்துத்தான் செய்வோம். மாவட்ட ஆட்சியரகங்க ளில் அரசு அலுவலகங்கள் ஒருங்கிணைந்து உள்ளன. ஊராட்சிகளில் அரசு அலுவலகங்கள் ஆங்காங்கே உள்ளன. ஒரே இடத்தில் அரசின் சேவைகள் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென முதல்வர் வழி காட்டுதல்களை வழங்கியுள்ளார்.
No comments:
Post a Comment