Saturday, 31 October 2020
Friday, 30 October 2020
Thursday, 29 October 2020
*கீ.வ.குப்பம் ஒன்றியம்,வேலூர் மாவட்டம்.* *தலைமை ஆசிரியர் கூட்டம் நாள் 29-10- 2020 இடம் பி.கே.புரம்* *புதிய வயதுவந்தோர் கல்வி திட்டம் - கற்போம் எழுதுவோம் இயக்கம் என்ற புதிய திட்டம் செயல்படுத்துதல் - வழிகாட்டு நெறிமுறைகளை நடைமுறைப்படுத்துவதற்கு, தலைமையாசிரியர் கூட்டம் இன்று வியாழக்கிழமை இரண்டு கட்டமாக நடைபறுகிறது.* *முதற்கட்டம் நடைபெற்ற பொழுது. எடுக்கப்பட்ட படங்கள்...*👇
Wednesday, 28 October 2020
பள்ளிகளின் செயல்பாடுகளை கண்காணிக்க ஊராட்சி அளவில் புதிய குழு - தமிழக அரசு உத்தரவு
. CLICK HERE TO DOWNLOAD THE GO
Tuesday, 27 October 2020
Monday, 26 October 2020
கல்விச்சான்றிதழ்கள் தொலைந்துவிட்டால் பெறுவது எப்படி?
CLICK HERE TO DOWNLOAD-Remedies on Loss of Certificate(Duplicate mark certificate and tc)
..*கல்விச்சான்றிதழ்கள் தொலைந்துவிட்டால் பெறுவது எப்படி?*
*நடைமுறைகள்:*
*பள்ளி மாற்றுச் சான்றிதழ்*
*இணைக்க வேண்டிய ஆவணங்கள்*
*கல்லூரிச் மாற்றுச் சான்றிதழ்*
*பள்ளி மதிப்பெண் சான்றிதழ்*
*கல்லூரி மதிப்பெண் சான்றிதழ்*
*தனித்தேர்வர்களுக்கு*
*குறிப்பு:*
*வீட்டில் பத்திரமாக இருக்கும் பள்ளிச் சான்றிதழ்கள், மதிப்பெண் பட்டியல்கள் இவற்றை சில சமயங்களில் சரிபார்த்தல் (Verification) அல்லது நேர்காணல் போன்ற காரணங்களுக்காக வெளியில் எடுத்துச் செல்ல நேரலாம். அப்படி செல்லும்போது பயணத்தில் தொலைந்துவிட்டாலோ அல்லது சுனாமி, வெள்ளம் போன்ற இயற்கைச் சீற்றங்களினால் அழிந்துவிட்டாலோ அல்லது எதிர்பாராதவிதமாக தீ விபத்துகளில் சேதமாகியிருந்தாலோ, கரையான்களால் பழுதுபட்டிருந்தாலோ மீண்டும் புதிய சான்றிதழை விண்ணப்பித்துப் பெற்றுக் கொள்ளவேண்டும்.*
*ஏனெனில் இந்தச் சான்றிதழ்கள் ஒவ்வொரு காலகட்டத்திலும் பயன்படக்கூடிய முக்கிய ஆவணங்களாகும். மேற்படிப்பு பயில, அரசின் கடன் உதவி பெற, வேலைகளில் சேர போன்றவற்றிற்கு மட்டுமல்லாது வயதுச் சான்றாகவும் பயன்படுகிற ஆவணங்கள் இவை.*
*தீவிபத்து, வெள்ளம், கரையான் போன்றவற்றால் சிதிலமாகி இழக்க நேரிட்டால் அதன் நகலை பெற முடியும்.*
*நடைமுறைகள்:*
*முதலில் மனுதாரர் தங்கள் பகுதியிலுள்ள காவல்நிலையத்தில் தேவையான தகவல்களுடன் புகார் அளிக்க வேண்டும்.*
*அடுத்து தொலைத்துவிட்ட விவரத்தை தினசரி பத்திரிகையில் அறிவிப்பு விளம்பரம் செய்ய வேண்டும்.*
*இதற்கு குறைந்தது ரூ.500 வரை செலவழிக்க நேரிடும்.*
*பின்னர் காவல்நிலையத்தில் சான்றிதழை கண்டுப்பிடிக்க முடியவில்லை என்று கொடுக்கப்படும் சான்றிதழை பெற வேண்டும்.*
*இதனை தாசில்தாரிடம் கொடுத்து அவரிடம் சான்றிதழ் பெற வேண்டும்.*
*சான்றிதழ் நகல் பெறுவதற்காக அரசு நிர்ணயித்துள்ள கட்டணத்திற்கு வங்கி வரவோலை வாங்க வேண்டும்.*
*பின்னர் பத்திரிகை விளம்பரத்தை வெட்டி எடுத்து தாசில்தார் சான்றிதழ், வங்கி வரைவோலை முதலியவற்றை கோரிக்கை மனு ஒன்று எழுதி அதனுடன் இணைக்க வேண்டும்.*
*மனுதாரர் எந்த பள்ளியில் பத்தாம் வகுப்பு அல்லது பிளஸ்2 படித்தாரோ அந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் மூலம் மாவட்ட கல்வி அதிகாரிக்கு விண்ணப்பத்தை அனுப்ப வேண்டும்.*
*அதனை மாவட்ட அதிகாரி பரிசீலனை செய்து மாநில அரசு தேர்வு துறை இயக்குநருக்கு மதிப்பெண் சான்றிதழ் நகல் வழங்க சிபாரிசு செய்வார்.*
*சான்றிதழ் தன்மைக்கேற்ப (படித்த ஆண்டின்) 3 அல்லது 6 மாதங்களுக்குள் சான்றிதழ் நகல் பள்ளி கல்வி தேர்வுத்துறை இயக்குனர் அலுவலகத்திலிருந்து அனுப்பி வைக்கப்படும்.*
*இதனை இறுதியாக எந்த பள்ளியில் படித்து முடித்தோமோ, அந்த பள்ளி தலைமை ஆசிரியரிடம் பெற முடியும்.*
*பள்ளி மாற்றுச் சான்றிதழ்*
*பள்ளி மாற்றுச் சான்றிதழ் (Transfer Certificate) தொலைந்துபோனால் உடனடியாக காவல் நிலையத்தில் புகாரளிக்க வேண்டும். அவர்கள் கண்டுபிடிக்க முடியவில்லை என்கிற சான்றை வழங்குவர்.*
*விண்ணப்பத்துடன் வட்டாட்சியரிடம் பள்ளி மாற்றுச் சான்றிதழ் தொலைந்துவிட்டது என்ற சான்றிதழை வாங்கி இணைத்துக் கொடுக்க வேண்டும். இத்துடன் பள்ளிச் சான்றிதழ் பெறுவதற்கான கட்டணத்தையும் செலுத்தி ரசீதை இணைக்க வேண்டும்.*
*எந்தப் பள்ளியில் படித்தீர்களோ அந்தப் பள்ளித் தலைமை ஆசிரியரிடமே விண்ணப்பிக்கலாம்.*
*இணைக்க வேண்டிய ஆவணங்கள்*
*மதிப்பெண் பட்டியல் நகல், பள்ளி மாற்றுச் சான்றிதழ் நகல், கட்டணம் செலுத்திய ரசீது.*
*கல்லூரிச் மாற்றுச் சான்றிதழ்*
*கல்லூரி மாற்றுச் சான்றிதழ் தொலைந்துபோனால் உடனடியாக காவல் நிலையத்தில் புகாரளிக்க வேண்டும். அவர்கள் கண்டுபிடிக்க முடியவில்லை என்கிற சான்றை வழங்குவர்.*
*அத்துடன் சான்றிதழ் தொலைந்தது குறித்து வட்டாட்சியரிடம் மனு செய்ய வேண்டும். அவர் அந்தப் பகுதி வருவாய் ஆய்வாளரால் விசாரணை நடத்திய பின்னர் சான்றிதழ் தொலைந்தது உண்மை எனச் சான்று வழங்குவார்.*
*பின்னர் காவல்துறை அளித்த சான்று, வட்டாட்சியர் அளித்த சான்று இவற்றுடன் கல்லூரி நிர்ணயம் செய்த தேடுதல் கட்டணத்தைச் செலுத்தி கல்லூரி முதல்வருக்கு விண்ணப்பிக்க வேண்டும்.*
*பள்ளி மதிப்பெண் சான்றிதழ்*
*பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் தொலைந்து போனால் முதலில் அந்தப் பகுதியிலுள்ள காவல் நிலையத்தில் புகாரளிக்க வேண்டும்.*
*அத்துடன் மதிப்பெண் பட்டியலின் எண், பதிவு எண், தேர்வு நடந்த வருடம், மாதம் ஆகிவற்றைக் குறிப்பிட்டு அந்தப் பகுதியில் உள்ள ஒரு முன்னணி நாளிதழில் அறிவிப்பு விளம்பரம் வெளியிட வேண்டும்.*
*பின்னர் காவல் நிலையத்தில் புகாரளித்ததற்கான ரசீது, பிரசுரமான விளம்பரம் ஆகியவற்றை இணைத்து பள்ளித் தலைமை ஆசிரியர் வழியாக மாவட்டக் கல்வி அதிகாரிக்கு விண்ணப்பம் அனுப்ப வேண்டும்.*
*இதனுடன் தேடுதல் கட்டணம் வங்கி வரைவோலையாக எடுத்து அனுப்ப வேண்டும்.*
*மனுவைப் பரிசீலித்து மாவட்டக் கல்வி அதிகாரி மாநில பள்ளிக் கல்வித்துறைக்கு விண்ணப்பம் செய்வார்.*
*கல்லூரி மதிப்பெண் சான்றிதழ்*
*கல்லூரி மதிப்பெண் சான்றிதழ் தொலைந்துவிட்டால் கடைசியாகப் படித்த கல்லூரி முதல்வருக்கு விண்ணப்பம் செய்ய வேண்டும்.*
*விண்ணப்பத்தைப் பெற்றுக் கொண்ட கல்லூரி முதல்வர் மதிப்பெண் சான்றிதழின் எண், பதிவு எண், தேர்வு நடந்த வருடம் ஆகியவற்றைச் சரிபார்த்து பல்கலைக்கழக தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரிக்குப் பரிந்துரைத்து எழுதுவார்.*
*இத்துடன் மதிப்பெண் சான்றிதழ் பெறுவதற்கான கட்டணத்தை வங்கி வரைவோலையாக எடுத்து அனுப்ப வேண்டும். மனுவைப் பெற்றுக் கொண்ட தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி மதிப்பெண் சான்றிதழ் வழங்குவார்.*
*விண்ணப்பம் செய்ததிலிருந்து 60 நாட்களுக்குள் இச்சான்றிதழ்கள் கிடைக்கப்பெறும்.*
*தனித்தேர்வர்களுக்கு*
*தனித்தேர்வர்கள் நேரடியாக தேர்வுத்துறை இயக்குநர் அலுவலகத்திற்கு விண்ணப்பம் அனுப்ப வேண்டும். பட்டம் மற்றும் அதற்கு மேற்பட்ட உயர் கல்விக்கு சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகங்களை அணுக வேண்டும்.*
*குறிப்பு:*
*பள்ளி / கல்லூரி மாற்றுச் சான்றிதழ்கள், பள்ளி / கல்லூரி மதிப்பெண் சான்றிதழ்கள் புதிதாகப் பெற அந்தந்த பள்ளித் தலைமையாசிரியரையோ அல்லது கல்லூரி முதல்வரையோ அணுகி மேலதிக விவரங்களையும், கட்டண விவரங்களையும் தெரிந்துகொள்ளவும்.*
Saturday, 24 October 2020
முன் அனுமதி பெற்று உயர்கல்வி பயின்ற அனைத்து ஆசிரியர்களின் அன்பான கவனத்திற்கு
அரசு தொடக்க/ நடுநிலைப் பள்ளி ஆசிரியர்கள் அளிக்க வேண்டிய படிவம். CLICK HERE TO DOWNLOAD PDF
*முன் அனுமதி பெற்று உயர்கல்வி பயின்ற அனைத்து ஆசிரியர்களின் அன்பான கவனத்திற்கு!!!!*
09-03-2020 க்கு முன்னர் உயர் கல்வி தகுதி பெற்று இதுநாள் வரை ஊக்க ஊதியம் பெறாத ஆசிரியர்கள்
உரிய இணைப்புகளுடன்
27.10.2020 செவ்வாய்க்கிழமைக்குள் 5 பிரதிகளுடன் (உரிய அசல் சான்றிதழ்கள் கையில் வைத்துக் கொண்டு) இணைத்து வட்டாரக் கல்வி அலுவலர்களிடம் சம்மந்தப்பட்ட ஆசிரியர்கள் நேரிடையாக அளிக்க வேண்டுகிறோம்.
(28-10-2020ஆம் தேதி மாவட்டக் கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டியிருப்பதால் உரிய நேரத்தில் ஒப்படைக்கும் படி கேட்டுக் கொள்கிறோம்)...
இணைப்பு
1.முகப்பு கடிதம்-உரிய வழியாக
2.கருத்துரு படிவம்.
3.பட்ட சான்றிதழ் நகல் ( UG,PG,BEd)
4.உண்மைத்தன்மை சான்றிதழ் நகல் (UG,PG,BEd)
5.இறுதித் தேர்வு கால அட்டவணை நகல்
6.துறை முன் அனுமதி நகல் (UG,PG,BEd)
7.இறுதி தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு (Hall Ticket)
8.பணி நியமன ஆணை நகல்
( பின்னேற்பு வேண்டி விண்ணப்பித்தவர்களைத் தவிர)
Tuesday, 20 October 2020
Sunday, 18 October 2020
Friday, 16 October 2020
Thursday, 15 October 2020
NISHTHA ( National Initiative for School Heads and Teachers Holistic Advancement ) பயிற்சி வழிகாட்டுதல்கள்.
Click Here To Download pdf - NISHTHA Training - SSA Instructions.
*NISHTHA ( National Initiative for School Heads and Teachers Holistic Advancement ) பயிற்சி வழிகாட்டுதல்கள்*
*1 முதல் 8 ம் வகுப்பு எடுக்கும் அனைத்துவகை பள்ளி ஆசிரியர்களும் ( அரசு / அரசு உதவிபெறும் / மெட்ரிக் / நர்சரி & பிரைமரி ) DIET விரிவுரையாளர்கள் , வட்டார கல்வி அலுவலர்கள் , மேற்பார்வையாளர்கள் மற்றும் ஆசிரியர் பயிற்றுநர்கள் அனைவரும் பயிற்சியில் பங்கு பெறுதல் வேண்டும்.*
*பயிற்சியில் மொத்தம் 18 பாடநெறிகள் ( Course ) உள்ளன . 15 நாட்களுக்கு 3 பாடநெறிகள் என்ற அடிப்படையில் அக்டோபர் - 16-2020 முதல் ஜனவரி 15-2021 வரை நடைபெறும் . - தமிழ் மற்றும் ஆங்கில வழியில் உள்ளன .*
*EMIS இணையதளத்தில் TNDIKSHA வை click செய்து அல்லது DIKSHA App பதிவிறக்கம் செய்து பயிற்சியில் பங்கு பெறலாம் .*
*( Enter Basic Details , Mobile No.- OTP ) Login - > Username - > Password - teacherID)*
*Password பெற EMIS இணையதளத்தில் கீழ்காணும் வழிமுறைகளை பின்பற்றவும்.*
*(School Login - > staff Detail - > Staff Login Detail - > TeacherID - > Password)*
*கால அட்டவணையில் குறிப்பிட்டுள்ள வரிசையில் ஆசிரியர்கள் பயிற்சியில் பங்கு பெறுதல் வேண்டும் . பாடநெறியில் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து செயல்பாடுகளையும் ஆசிரியர்கள் நிறைவு செய்தல் வேண்டும்*
*(Demonstration - > Transcript - > Activity)*
*பாடநெறியில் ஏதெனும் சந்தேகம் இருப்பின் Telegram குழுவில் உள்ள Resource Person- னிடம் தெளிவு பெற்று கொள்ளலாம்.*
*பாடப்பொருளை ஆசிரியர்கள் குறிப்பு எடுத்து வைத்து கொள்ள வேண்டும்.*
*சுயநிதி பள்ளிகள் 1 முதல் 8 வகுப்பு வரை கையாளும் அனைத்து ஆசிரியர்களும் பயிற்சியில் பங்குபெறுவதை மாவட்டக்கல்வி அலுவலர்கள் மற்றும் வட்டாரக்கல்வி அலுவலர்கள் உறுதி செய்திடல் வேண்டும்.*
*பயிற்சியில் பங்கேற்கும் அனைத்து ஆசிரியர்கள் மற்றும் தொடர்புடைய அலுவலர்கள் Telegram app download செய்தல் வேண்டும்.*
*பயிற்சி தொடர்பான தகவல்கள் Telegram app ல் அனுப்பப்படும் என தெரிவிக்கப்படுகிறது.*
*அனைத்து பாட நெறிகளும் ( 18 course ) நிறைவு செய்தவுடன் ஜனவரி 2021 மாதத்தில் Complementary Based Assessment தேர்வில் 60 % மேல் எடுப்பவர்களுக்கு Certificate of Merit Online- ல் வழங்கப்படும்.*
Tuesday, 13 October 2020
ஆசிரியர்களுக்கு 3 மாதத்திற்ககான NISHTHA பயிற்சி பாடநெறிகளுக்கான கால அட்டவணை மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்பதற்கான வழிமுறைகள் வெளியீடு.
NISHTHA TRAINING SCHEDULE- CLICK HERE TO DOWNLOAD PDF
*உலகில் ஒவ்வொரு நாளும் அறிவியலிலும் , தொழில் நுட்பத்திலும் மற்ற துறைகளிலும் புதிய புதிய கண்டுபிடிப்புகளும் வளர்ச்சியும் பெருகிக்கொண்டே வருகின்றன . ஆசிரியர்கள் தற்போதைய மாற்றங்களை அறிந்துக் கொண்டு தங்களது கற்பிக்கும் திறனையும் , தொழில் நுட்ப அறிவையும் அவ்வப்போது பெருக்கிக் கொள்வதும் , கற்றல் கற்பித்தலில் புதிய அணுகுமுறைகளை பற்றி தெரிந்து கொள்ளுதலும் இன்றியமையாததாகும் . எனவே ஆசிரியர்களுக்குத் தொடர்ந்து கற்றல் , கற்றுக் கொண்டே இருத்தல் , அறிவைப் புதுப்பித்தல் ஆகியன மிக அவசியம் என்பதால் ஒவ்வொரு ஆண்டும் அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணிபுரியும் தொடக்க மற்றும் உயர் தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு பணியிடைப் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது* .
*2019-20 ஆம் கல்வியாண்டில் 1 முதல் 8 வகுப்புகளை கையாளும் அரசு பள்ளி Ariunite 6. & NISHTHA- National Initiative for School Heads and Teachers ' Holistic Advancement என்ற ஒருங்கிணைந்த பயிற்சி அளிக்கப்பட்டது . அப்பயிற்சி வெற்றி பெற்றதன் தொடர்ச்சியாக இக்கல்வியாண்டில் இணைய வழியாக ( Online ) கட்டணமில்லா NISHTHA பாடநெறிகள் ( courses ) பள்ளிக் கல்வித் துறையின் கீழ் இயங்கி வரும் அனைத்து அரசு , அரசு உதவி பெறும் பள்ளி , Matric மற்றும் Nursery & Primary பள்ளிகளில் 1 முதல் 8 வகுப்புகளை கையாளும் ஆசிரியர்களுக்கு வழங்க மத்திய கல்வி அமைச்சகம் திட்டமிட்டுள்ளது . கடந்த கல்வியாண்டில் நடைபெற்ற NISHTHA பயிற்சியில் வழங்கப்பட்ட ஒவ்வொரு தலைப்பின் கீழும் உள்ள கருத்துக்களில் தற்பொழுது இணைய வழியில் வழங்கும் விதமாக பல்வேறு மாற்றங்களை NCERT மேற்கொண்டுள்ளது . இதில் பல்வேறு செயல்பாடுகள் , காணொலிகள் , வினாடி வினா ( Quiz ) இணைக்கப்பட்டு புதிய கல்விக் கொள்கை பரிந்துரைகளின் அடிப்படையில் 18 பாடநெறிகள் ( courses ) வடிவமைக்கப்பட்டுள்ளன . இதில் புதிதாக COVID 19 நிகழ் சூழ்நிலையினை பள்ளி கல்வியில் எதிர்கொள்ள வேண்டிய சவால்களை பற்றி ஒரு பாடநெறி இணைக்கப்பட்டுள்ளது* .
*இக்கல்வியாண்டில் இணைய வழி NISHTHA பாடநெறிகளில் ( Online courses ) கலந்துகொள்ளும் ஆசிரியர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படவுள்ளது . எனவே கடந்த கல்வியாண்டில் பயிற்சி மேற்கொண்ட 1 முதல் 8 வகுப்புகளை கையாளும் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் இக்கட்டணமில்லா இணைய வழி NISHTHA பாடநெறிகளில் ( Online courses ) தங்கள் பணி மேம்பாட்டிற்காக பங்கேற்கலாம் . மேலும் கடந்த கல்வியாண்டில் பயிற்சி மேற்கொள்ளாத 1 முதல் 8 வகுப்புகளை கையாளும் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் கட்டாயமாக இணைய வழி NISHTHA பாடநெறிகளில் ( Online courses ) கலந்துகொள்ள வேண்டும் . Digital Infrastructure for Knowledge Sharing ( DIKSHA ) இணைய தளத்தில் இடம்பெற்றுள்ள பாடம் சார் வளங்கள் , ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களால் DIKSHA portal மற்றும் Mobile App வழியாக பயன்படுத்தப்பட்டு வருகிறது . எனவே NISHTHA பாடநெறிகள் ( Online courses ) , DIKSHA வழியாக அளிக்கப்படவுள்ளது.*
*NISHTHA பாடநெறிகள் அனைத்து ஆசிரியர்களும் எளிதில் பங்கேற்கும் விதமாக ஆங்கிலம் மற்றும் தமிழ் வழியில் வடிவமைக்கப்பட்டுள்ளது . 15 நாள்களுக்கு 3 courses என்ற அடிப்படையில் 2020 அக்டோபர் 16 முதல் 2021 சனவரி 15 வரை மூன்று மாதத்திற்கு பின்வருமாறு ஆங்கில வழி மற்றும் தமிழ் வழிக்கான கால அட்டவணை வடிவமைக்கப்பட்டுள்ளது*
Saturday, 10 October 2020
Friday, 9 October 2020
Thursday, 8 October 2020
Wednesday, 7 October 2020
பார்வையில் கண்டுள்ள அரசாணை களுக்குத் தொடர்ச்சியாக கல்வி தொலைக்காட்சியில் மாணவர்களின் கல்வி தரத்தை உயர்த்துவதற்காக பல்வேறு நிகழ்ச்சிகளை தயாரித்து வருகிறது இதன் தொடர்ச்சியாக பார்வை 4ல் கண்டுள்ள அரசு கடிதத்தில் கல்வி தொலைக்காட்சியில் டாக்டர், A.P.J. அப்துல்கலாம் பிறந்தநாளை ஒட்டி 12.10.2020 முதல் 15.10.2020 முடிய சிறப்பு நிகழ்ச்சிகள் கல்வி தொலைக்காட்சி மூலம் ஒளிபரப்பு செய்யப்பட உள்ளன. இந்நிகழ்ச்சிகள் அனைத்தும் அரசு / அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ / மாணவிகள் பார்க்கும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்
கல்வி
தொலைக்காட்சி சிறப்பு அலுவலர் அவர்களின் செயல்முறைகள், சென்னை - 85 ந.க.எண். 0042/கல்விதொலைக்காட்சி /2020, நாள்:05.10.2020 கல்வி தொலைக்காட்சி, கோட்டூர்புரம், சென்னை - 85, - பொருள்
பார்வை :
A.P.J. அப்துல் கலாம் அவர்களின் பிறந்தநாள் 15.10.2020 அன்று நிகழ்ச்சிகள் சார்ந்த விவரங்கள் அனுப்புதல் - தொடர்பாக எண்.196 பள்ளிக்
(14 1) நாள்.26.6.2013.
அரசாணை
நாள்.27.08.2019
(91)எண் 340,
பள்ளிக்கல்வித்துறை
அரசாணை (வாலாயம்) எண் 58, பள்ளிக் கல்வி(பக1(1))த்துறை, நாள்.16.06.2020 பள்ளிக்கல்வித்துறை தலைமை செயலகம் சென்னை
ந.க.எண்.15413/GL1(2)2020-1, நாள்.01.10.2020
பார்வையில் கண்டுள்ள அரசாணை களுக்குத் தொடர்ச்சியாக கல்வி தொலைக்காட்சியில் மாணவர்களின் கல்வி தரத்தை உயர்த்துவதற்காக பல்வேறு நிகழ்ச்சிகளை தயாரித்து வருகிறது இதன் தொடர்ச்சியாக பார்வை 4ல் கண்டுள்ள அரசு கடிதத்தில் கல்வி தொலைக்காட்சியில் டாக்டர், A.P.J. அப்துல்கலாம் பிறந்தநாளை ஒட்டி 12.10.2020 முதல் 15.10.2020 முடிய சிறப்பு நிகழ்ச்சிகள் கல்வி தொலைக்காட்சி மூலம் ஒளிபரப்பு செய்யப்பட உள்ளன. இந்நிகழ்ச்சிகள் அனைத்தும் அரசு / அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ / மாணவிகள் பார்க்கும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்
பெறுநர்
அனைத்து முதன்மை கல்வி அலுவலர்கள்
சிறப்பு அலுவலர்
கல்வி தொலைக்காட்சி கோட்டூர்புரம், சென்னை - 85.