Monday, 22 January 2024

தமிழ்நாட்டில் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் வகுப்பறைகள் விரைவில் இப்படி மாறப்போகிறதா?




 *27 ஆயிரம் அரசு பள்ளிகளை நவீனமாக மாற்ற புதிய திட்டம்- கற்பித்தல் தரத்தை உயர்த்த நடவடிக்கை*


*தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளின் தரத்தை உயர்த்த கல்வித் துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.* *மாணவர்களை தனியார் பள்ளிகளுக்கு இணையாக கல்வி கற்பித்தல் முறையில் கொண்டு வருவதற்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.*

*பள்ளிகளில் அடிப்படையான கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி வரும் நிலையில் வருகிற கல்வி ஆண்டில் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ- மாணவிகளுக்கு மேலும் பல வசதிகளை செய்து கொடுக்க கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.*


*தமிழகத்தில் உள்ள 7 ஆயிரம் அரசு நடுநிலைப் பள்ளிகளின் தரத்தை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.*


*ஒவ்வொரு பள்ளிகளிலும் ஹைடெக் லேப் அமைப்பதற்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. இந்த பரிசோதனைக் கூடத்தை பராமரிக்க கம்ப்யூட்டர் ஆசிரியர் ஒருவரும் நியக்கப்படுகிறார்.*


*இண்டர்நெட் வசதியுடன் இந்த ஹைடெக் லேப் அமைக்கப்பட உள்ளது. இதற்கு சுமார் 100 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.*


*ஒரு பள்ளிக்கு ஹைடெக் லேப் அமைக்க ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. டெண்டர் இறுதி செய்யப்பட்டு விரைவில் இந்த பணி தொடங்கப்பட உள்ளது.*


*இதைப் போல 20 ஆயிரம் தொடக்கப் பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறை அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. 1 முதல் 5 வரை படிக்கும் மாணவர்களின் கல்வி ஆற்றலை பெருக்கும் வகையில் இந்த ஸ்மார்ட் வகுப்பு அமைய உள்ளது.*


*திரை மற்றும் புரஜெக்டருடன் கம்ப்யூட்டர் வசதியும் செய்யப்பட உள்ளது. இதன் மூலம் மாணவர்களுக்கு எளிதான முறையில் பாடங்களை கற்பிக்க முடியும்.*


*இது தவிர தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி ஆசிரியர்கள் 80 ஆயிரம் பேருக்கு கையடக்க கணினி (டேப்லெட்) வழங்கும் திட்டமும் ஜூன் மாதத்தில் செயல்படுத்தப்பட உள்ளது.*


*இதன் மூலம் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு கற்பிக்கும் திறனை வளர்க்க முடியும். ஸ்மார்ட் வகுப்பறையில் உள்ள திரையின் மூலம் மாணவர்கள் எளிதாக பாடங்களை புரிந்து கொள்ளலாம்.*


*அந்த அடிப்படையில் தொடக்கக் கல்வித் துறையில் இந்த புதிய திட்டங்களை வருகிற கல்வியாண்டில் செயல்படுத்த டெண்டர்கள் இறுதி செய்யப்பட்டு பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளன. இந்த திட்டங்கள் தமிழ்நாடு பாடநூல் நிறுவனம் சார்பில் மேற்கொள்ளப்படுகிறது.*


*இதுகுறித்து தொடக்கக் கல்வித் துறை இயக்குனர் கண்ணப்பன் கூறியதாவது:-*


*தொடக்க கல்வித் துறை யின் தரத்தை உயர்த்தும் வகையில் டிஜிட்டல் மயமாக்கப்படுகிறது. மாணவர்களின் இடைநிற்றல் தவிர்க்கப்படுவதோடு அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.*


*எண்ணறிவும் எழுத்தறிவும் வளர்ச்சி அடைவதோடு மாணவர்களின் கல்வித் திறனும் உயரும். வருகிற கல்வியாண்டில் இந்த புதிய திட்டங்கள் செயல்பாட்டிற்கு கொண்டு வரப்படுகிறது. அதற்கான ஆயத்தப் பணிகள் தொடங்கிவிட்டன.*

*இவ்வாறு அவர் கூறினார்.*

INCOME TAX FORM PDF (FINANCIAL YEAR 23-24 ASSESSMENT YEAR 24-25) DOWNLOAD HERE


 

CLICK HERE TO DOWNLOAD PDF

Thursday, 9 November 2023

தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித்துறை, புதியதாக தொடக்க நிலைக்கு உருவாக்கப்பட்ட உதவி திட்ட அலுவலர்.



தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித்துறை, புதியதாக தொடக்க நிலைக்கு உருவாக்கப்பட்ட உதவி திட்ட அலுவலர் பதவிக்கு வேலூர் மாவட்டத்திற்கு,
03-11-2023 அன்று திரு. சிவக்குமார் அவர்கள் (முன்னாள் தலைமை ஆசிரியர் அரசினர் மேல்நிலைப்பள்ளி தொரப்பாடி) உதவி திட்ட அலுவலர் தொடக்க நிலை பொறுப்பேற்றுக் கொண்டார்.

APO (ASSISTANT PROJECT OFFICER) ELEMENTARY


Wednesday, 28 June 2023

🌎🌎🌎🌎🌎🌎🌎 *தமிழ் நாடு தொடக்க பள்ளி ஆசிரியர் கூட்டணி* *கீ வ குப்பம் வட்டாரம்* 🌷🌹🌷🌹🌷🌹🌷 *இன்று 28-06-2023 புதன்கிழமை தேர்தல் ஆணையாளர்* *திரு. சி. வினோத் குமார்* *செயலாளர்* *அணைக்கட்டு வட்டாரம் அவர்கள்* *தலைமையில்* *பி.கே.புரம் ஊ.ஒ.ந.நி.பள்ளியில் மாலை 4-30* *மணி அளவில் நடைபெற்ற* *வட்டாரம்/துணை* *பொறுப்பு* *மாவட்ட* *பொறுப்பிற்கு, தேர்தல் நடைபெற்றதில் கீழ்கண்ட பொறுப்பாளர்கள்* *ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்கள்.* *வட்டாரத்தலைவர்.* *சி. ஆறுமுகம்.* *வட்டாரத் துணைத் தலைவர்கள்.* *வே.ஆனந்தன்* *பி.மாலா* *எஸ்.சம்பத்* 🌷🌹🌷🌹🌷🌹🌷 *வட்டாரச்செயலாளர்.* *அ. சுதாகரன்.* *வட்டாரத்துணைச் செயலாளர்கள்.* *ர.பாஸ்கர்* *க.அய்யப்பன்* *ச.விஜயா* 🌷🌹🌷🌹🌷🌹🌷 *வட்டாரப் பொருளாளர்.* *ச.வடிவேல்* 🌷🌹🌷🌹🌷🌹🌷 *மகளிர் அணி செயலாளர்.* *கு.உமாராணி* 🌹🌷🌹🌷🌹🌷🌹 *மாவட்ட பொதுக்குழு உறுப்பினர்கள்.* *கு.கீதா* *நா.நாகராஜ்* 🌷🌹🌷🌹🌷🌹🌷 *மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹*