Monday, 30 November 2020
Saturday, 28 November 2020
தனி ஊதியம் 750/- ஐ 1.1.2006 முதல் பொருந்தும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது, 2006-2010 இடைவெளியில் பதவி உயர்வு பெற்றவர்கள் இழந்து வரும் தனி ஊதியத்தினை (750 PP) அடிப்படை ஊதியத்துடன் சேர்த்துக்கொள்ள நீதிமன்றம் உத்தரவு. தனி ஊதியம் 750 பெறுவது குறித்த வழக்கின் தீர்பாணைகள் வழக்கை தொடுத்தவர்களுக்கே பொருந்தும் . தீர்பாணையில் பெயரில்லாதவர்கள் பெற இயலாது . தனி ஊதியம் 1.1.2006 முதல் பெற ஏற்கனவே பெற்ற தீர்பாணைகளை காட்டி வழக்கு தொடுத்து பெறுவதே தனி நபர்களுக்கு தீர்வாகும்.. ஆகவே ஒருவர் பெற்ற தீர்பாணை அனைவருக்கும் பொருந்தாது. இப்போது நாம் பார்க்கும் தீர்பாணைகள் 2014 ல் வழக்கு தொடுத்து 2018 ல் தீர்ப்பு பெற்ற கரூர் தான்தோன்றிமலை ஒன்றிய சந்திரமோகன் என்பவர் பெற்ற ஆணையை ஒட்டி 2015ல் வழக்காடி 2020 ல் பெறப்பட்ட முத்துப்பாண்டி என்பவரின் ஆணை . தீர்பாணைகள் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்டோர் நீதிமன்றத்தில் பரிகாரம் பெறலாம்.
கொரோனோ தடுப்பூசி தயாரிக்கும் ஜைடஸ் காடிலா நிறுவனத்தில் மேதகு பாரதப்பிரதமர் நரேந்திரமோடி ஆய்வு செய்தார் கொரோனா பெருந்தொற்றுக்கு மருந்து தயாரிக்க இந்தியாவில் 7 நிறுவனங்களுக்கு மத்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி அளித்துள்ளது. இதில் ஒன்றான ஜைடஸ் காடிலா நிறுவனத்திற்கு சென்ற மேதகு பாரதப்பிரதமர் நரேந்திர மோடி, தடுப்பூசி தயாரிக்கும் பணிகளை ஆய்வு செய்தார்... காணொளி
Friday, 27 November 2020
Thursday, 26 November 2020
Wednesday, 25 November 2020
26.11.2020 அன்று நடைபெறவுள்ள வேலைநிறுத்தத்தில் கலந்து கொண்டவர்கள் விவரம் கோருதல் அனைத்துவகை அரசு/நகரவை/ஆதி திரா நல/நிதியுதவி பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, 26.11.2020 அன்று நடைபெறவுள்ள வேலைநிறுத்தத்தில் கலந்துகொண்டவர்கள் விவரங்களை இணைப்பில் உள்ள படிவத்தில் (Google Sheets) 26.11.2020 காலை 10.00 மணிக்குள் உள்ளீடு செய்யும்படி அனைத்துவகை அரசு/நகரவை/ஆதி திரா நல/நிதியுதவி பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE LETTER CLICK HERE TO DOWNLOAD THE LETTER CLICK HERE TO ENTER THE DETAILS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
Tuesday, 24 November 2020
Sunday, 22 November 2020
Saturday, 21 November 2020
Friday, 20 November 2020
PENSION ஒரு பார்வை....
*PENSION பற்றிய பார்வை*
*30 ஆண்டுகள் அல்லது அதற்கு மேலும்* பணி செய்திருந்தால் *full pension* கிடைக்கும். *Full pension* என்பது *கடைசி மாத ஊதியத்தில் Basic, DA இரண்டையும் கூட்டி அதில் பாதியை எடுத்து அத்துடன் 100 ரூபாய் Health Allowance ம் சேர்த்து வரும் தொகையாகும்.*
உதாரணமாக *30ஆண்டுகளுக்கு மேல்* பணிபுரிந்த ஒருவர் கடைசிமாத ஊதியமாக *40000 ரூபாய் basicம் 5000 ரூபாய் DAவும்* வாங்கியிருந்தால் அவருக்கு (40000+5000)÷2+100=
*22600 ரூபாய்* பென்ஷனாகக் கிடைக்கும். இவரே *24ஆண்டுகள்* தான் சர்வீஸ் எனில் இவருக்கு (22500×24÷30)+100=
18100பென்ஷனாகக்கிடைக்கும்.(அதாவது Basic+DAல் பாதியை எடுத்து கொண்டு தை 30ஆல் வகுத்து சர்வீஸ் செய்த ஆண்டுகளால் பெருக்கி அத்துடன் *ரூ100 Health Allowance* ஐக் கூட்ட வேண்டும். *இது Computation வேண்டாம் என்பவர்களுக்கு*. *Computation வேண்டும்* என்பவர்களுக்கு இன்னும் குறையும்.அதற்கான விவரம்.
முதலில் கமுடேஷன் என்பது ஓய்வு பெற்ற தொழிலாளி நிர்வாகத்திடம் பெறும் கடன் தொகையாகும்.இது வட்டி இல்லாத கடனல்ல. வட்டி உண்டு.
*30ஆண்டுகளுக்கு மேல்* பணிசெய்து ஓய்வு பெற்ற தொழிலாளிக்கு அவர்கடைசியாகப் பெற்ற *பேசிக்கில் பாதியும் DAல் பாதியும் அத்துடன் நூறு ரூபாய் ஹெல்த் அலவன்ஸூம் சேர்ந்து* பென்ஷனாகக்கிடைக்கும் என்று முந்தைய பதிவில் பார்த்தோம்
அதாவது(30ஆண்டுகள் பணி முடித்து ஓய்வு பெற்றவர்) பணியிலிருக்கும்போது 40000ரூபாய் பேசிக் வாங்கியிருந்தார் என்றால் ஓய்வு பெற்றபின் அவருடைய பேசிக் 20000ரூபாயாக ஆகிவிடும்.இப்போது இவர் கமுட்டேஷன் வேண்டும் எனறு விரும்புகிறார் எனில் இவருக்கு எவ்வளவு தொகை கமுட்டேஷனாகக் கிடைக்கும் என்று பார்ப்போம்.
பேசிக்கில் மூன்றில் ஒரு பகுதியை கணக்கிட்டு அதை 120ஆல் பெருக்கி வரும் தொகையே கமுடேஷன் ஆகும்.பிடித்தம் செய்யும்போது 180 மாதங்களுக்குப் பிடிப்பார்கள்.
ஓய்வு பெற்றபின் இவருடைய பேசிக் 20000ரூபாய்.இதில் மூன்றில் ஒருபாகம் =20000÷3=6666.66 ,இதை
6667 என்று எடுத்துக்கொன்டு 120ஆல் பெருக்க 6667×120=800040(எட்டு லட்சத்து நாற்பது)ரூபாய் கமுட்டேஷன் கிடைக்கும். பென்ஷன் தொகையில் ஒவ்வொரு மாதமும் ரூ.6667பிடித்தம் செய்வார்கள்.இந்த பிடித்தம் 180 மாதங்களுக்குத் தொடரும்.(அதாவது6667ஐ 120ஆல் பெருக்கிக் கொடுத்துவிட்டுஇதே 6667ஐ 180 மாதங்களுக்குப் பிடிப்பார்கள்.அப்ப வட்டி என்பது6667×60=400020 ரூபாய் ஆகும்.பதினைந்து ஆண்டுகள் என்று பார்க்கும்போது இது குறைந்த வட்டிதான்). இடையில் இவர் இறந்துவிட்டால் இந்தப் பிடித்தம் தள்ளுபடி செய்யப்பட்டுவிடும்.இவர் மனைவிக்குக் கொடுக்கப்படும் பென்ஷனில் பிடித்தம் செய்யப்ப்பட மாட்டாது.
(பென்ஷன் வாங்குபவர் இறந்துதுவிட்டால் அவர் வாங்கிய பென்ஷனில் பாதி அவர் மனைவிக்குப் பென்ஷனாகக் கிடைக்கும் என்பதை நினைவில் கொள்க.)
30 ஆண்டு முடித்த 40000ரூபாய் பேசிக்கும் 5000ரூபாய் DAவும் பெற்ற ஒருவர் கமுடேஷன் வேண்டாம் எனும்போது அவருக்கு22600ரூபாய் பென்ஷனாகக் கிடைக்கும் என்று பார்த்தோம்.இவரே கமுட்டேஷனை விரும்புகிறார் என்றால் இவருக்கு 6667ஐக் கழிக்க 22600-6667=15933 ரூபாய் பென்ஷன் கிடைக்கும்.
இவரே 24 வருடம் சர்வீஸ் செய்திருந்தால் இவருடைய கமுட்டேஷனைப் பார்ப்போம்.
ஓய்வு பெற்றபின் இவருடைய பேசிக் 40000÷2×24÷30=16000 ஆகும்.இதில் மூன்றிலொரு பாகம் 16000÷3=5333.33.இதை 5333என எடுத்துக்கொண்டு அதை120 ஆல் பெருக்க
5333×120=639960ரூபாய் கமுட்டேஷனாகக் கிடைக்கும்.கமுட்டேஷன் வாங்கியபின் இவருடைய பென்ஷன்
18100-5333=12767கிடைக்கும்.(18100 எப்படி வந்ததென்பது தெரியும். தெரியவில்லையெனில் முந்தைய கமெண்ட்டில் பார்க்கவும்)
நண்பர்களே மேற்கண்ட விவரங்களை வைத்து அவரவர் சர்வீஸ் செய்த ஆண்டுகள் மற்றும் அவரவர் பெற்ற பேசிக்கிற்குத் தகுந்தாற்போல் பென்ஷன் மற்றும் கமுடேஷனைக் கணக்கிட்டுக் கொள்ளலாம்.
ஆசிரியர்குரல் அருணாசலம்
Thursday, 19 November 2020
Wednesday, 18 November 2020
தேர்தல் ஆணையம் சிறப்பு முகாம் 2021 சார்பாக 01.01.2021 நிலவரப்படி வாக்காளர் பட்டியலில் புதியதாக சேர்க்கை / திருத்தம் / நீக்கம் சார்பான படிவங்களில் தகவல்கள் பெறுவதற்கு 16.11.2020 முதல் 15.12.2020 வரையிலான காலத்தில் 4 நாட்கள் சிறப்பு முகாம் 21.11.2020, 22.11.2020, 12.12.2020 மற்றும் 13.12.2020 ஆகிய நாட்களில் நடைபெறவுள்ளது. மேற்படி சிறப்பு முகாம் நடைபெறும் நாட்களில் தேர்தல் நடைபெறும் வாக்குச் அமைந்துள்ள பள்ளிகளில் Location Officer-ஆகவுள்ள தலைமையாசிரியர்கள் / உதவி தலைமையாசிரியர்கள் / பொறுப்பாசிரியர்கள் பள்ளி வளாகத்தில் காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை வாக்காளர்கள் பூர்த்தி செய்து கொடுக்கும் படிவங்களை பெற்றுக் கொள்ள தெரிவிக்கப்படுகிறது. முதன்மைக்கல்வி அலுவலர் வேலூர்.
அனைத்து வட்டார EMIS ஒருங்கிணைப்பாளர் களின் கவனத்திற்கு EMIS தொடர்பான அனைத்து பிரச்சினை களையும் கீழே கொடுக்கப்பட்டுள்ள link மூலம் மட்டும் பதிவு செய்ய வேண்டும்.. தனிநபர் அல்லது குழு what's app ல் பதிவு செய்ய வேண்டாம். இனிமேல் இந்த link ன் கீழ் அனுப்ப படும் பிரச்சினைகள் மட்டுமே கவனம் செலுத்தி சரி செய்யப்படும் . ஏற்கனவே சரி செய்யப்படாத பிரச்சினைகள் இருந்தாலும் அவற்றை இதில் பதிவு செய்யவும்.எனவே இத்தகவலை உடனே அனைத்து தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு தெரிவிக்க படுகிறது. கூடுதல் முதன்மைக் கல்வி அலுவலர் , ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி வேலூர் மாவட்டம்.
Tuesday, 17 November 2020
Monday, 16 November 2020
Sunday, 15 November 2020
Saturday, 14 November 2020
Thursday, 12 November 2020
Wednesday, 11 November 2020
Tuesday, 10 November 2020
Monday, 9 November 2020
Thursday, 5 November 2020
பள்ளிக்கல்வி- அரசு அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகள் பள்ளிகள்- திறப்பது குறித்து- கருத்துக்கேட்பு கூட்டம் நடைபெறுதல் சார்ந்தது - வேலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் செயல்முறைகள்
*வேலூர் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலரின் செயல்முறைகள்**ந.க.எண்.1774/ஆ1/2020, நாள் 05.11.2020*- - -பொருள் ;*பள்ளிக்கல்வி - அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகள் - பள்ளிகள் திறப்பது குறித்தது - கருத்து கேட்பு கூட்டம் நடைபெறுதல் - சார்ந்த அறிவுரைகள்.*பார்வை :1.அரசாணை எண்.613 வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை நாள் 31.10.2020
2.பள்ளிக் கல்வித்துறையின் அரசு செய்தி குறிப்பு வெளியீடு எண்.630 நாள் 04.11.2020
3. சென்னை, தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்.34462/பிடி1/இ1/2020, நாள் 04.11.2020- - - மாண்புமிகு தமிழக முதமைச்சர் அவர்களால் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, சுகாதாரத்துறை மற்றும் தொற்றுநோய் சிறப்பு வல்லுநர் குழுவுடன் கலந்து ஆலோசிக்கப்பட்டு நவம்பர் 16ஆம் தேதி முதல் 09,10,11 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கு மட்டும் உரிய பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் பள்ளிகள் திறக்க அறிவிப்பு வெளியிடப்பட்டதற்கு இணங்க அதனை செயல்படுத்தும் விதமாக பார்வை (1)ல் கண்டுள்ள அரசாணையின்படி தமிழகத்தில் மாணவர்களின் கல்வி நலனை கருத்தில் கொண்டு பொதுத்தேர்வு நடைபெறும் உயர் வகுப்புகளுக்கு முன்னுரிமை வழங்கி பள்ளிகளை திறப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு, வரும் நவம்பர் 16ஆம் தேதி முதல் 9,10,11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் உரிய பாதுகாப்பு முன்னெச்செரிக்கை நடவடிக்கைகளுடன் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி அந்தந்த அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகளை திறந்திடலாம் என தமிழக அரசால் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் பள்ளிகள் திறப்பது குறித்து ஏற்கனவே பெற்றோர்கள் கல்வியாளர்களின் கருத்துக்கள் அரசால் பெறப்பட்டு பரிசீலிக்கப்பட்டு இருந்தபோதிலும், அரசின் வழிகாட்டுதலின்படி அந்தந்த அரசுப்பள்ளிகள், அரசு உதவிபெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் பெற்றார்-ஆசிரியர் சங்க நிர்வாகிகளிடமும், தனியார் பள்ளிகளின் நிர்வாகத்துடனும் பள்ளிகள் திறப்பது குறித்து கருத்துகளை பெற்றிட ஏதுவாக வருகின்ற நவம்பர் 9ஆம் (திங்கட்கிழமை) தேதி தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகளிலும், கோவிட் 19 முன்னெச்செரிக்கை குறித்து அரசால் வெளியிடப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகளுக்கு உட்பட்டு கருத்து கேட்பு கூட்டம் அந்தந்த பள்ளி தலைமையாசிரியர்களின் தலைமையில் காலை 10 மணி அளவில் நடைபெற உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என பார்வை (2)ல் கண்ட பள்ளி கல்வித்துறையின் அரசு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதன்படி பின்வரும் நடவடிக்கை மேற்கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது. அவ்வாறு கருத்து கேட்பு கூட்டம் நடைபெறும் போது மாணவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ள பள்ளிகளில் பெற்றோர்கள் அதிகம் பங்கேற்க வாய்ப்பு உள்ளது. அச்சமயத்தில் 9,10,11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களின் பெற்றோர்களுக்கு தனித்தனியாக கோவிட் 19 முன்னெச்சரிக்கை குறித்து அரசால் வெளியிடப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகளுக்கு உட்பட்டு கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்பட வேண்டும். அதிக அளவில் பெற்றோர்கள் வரக்கூடிய பள்ளிகளில் பெற்றோர்ரகளை வெவ்வேறு நேரங்களில் குறிப்பிட்ட கால இடைவெளி விட்டு அழைத்து கூட்டம் நடத்தப்பட வேண்டும். அதேபோன்று கூட்டம் முடிக்கும் பொழுதும் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு வெவ்வேறு நேரங்களில் முடித்து அனுப்ப வேண்டும். அச்சமயம் தலைமை ஆசிரியரே அனைத்து வகுப்பு கருத்து கேட்பு கூட்டத்தை நடத்த இயலாத பட்சத்தில் உதவி தலைமையாசிரியர்களை கொண்டு கருத்து கேட்பு கூட்டங்களை நடத்த அனைத்து பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட வேண்டும். அவ்வாறு நடைபெற உள்ள கருத்து கேட்பு கூட்ட அரங்கை/ அறைகள் சுத்தமாகவும் இருக்க கிருமிநாசினி கொண்டு தூய்மை செய்தல் வேண்டும். பெற்றோர்கள் சமூக இடைவெளியுடன் அமரும்படி இருக்கைகள் அமைத்தல் வேண்டும். மேலும் கூட்டத்திற்கு வரும் பெற்றோர்கள் கண்டிப்பாக முககவசம் அணிந்து வர அறிவுறுத்தும்படி அனைத்து தலைமையாசிரியர்ரகள் அவரிடம் தெரிவிக்க வேண்டும். கருத்து கேட்பு கூட்டத்திற்கு வருகை தரும் பெற்றோர்கள் பள்ளி முகப்பில் தெர்மல் ஸ்கேனர் கொண்டு சோதனை செய்து பள்ளி வளாகத்தில் நுழைய அனுமதிக்க வேண்டும். மேலும் கூட்ட அரங்கின் நுழைவாயிலில் கிருமிநாசினியால் (Hand Sanitiser) கைகளை சுத்தம் செய்த பின்பு கூட்டத்திற்கு அனுமதிக்க வேண்டும். இப்பணிகளை மேற்கொள்ள ஒருவரை நியமித்து எவ்வித சுணக்கமுமின்றி செயல்பட அனைத்து தலைமையாசிரியர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.. மேலும், அரசுப்பள்ளி/ அரசு உதவிபெறும் பள்ளித் தலைமையாசிரியர், பெற்றோர்-ஆசிரியர் கழக பொறுப்பாளர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி/ சி.பி.எஸ்.சி., தனியார் பள்ளிகளை சார்ந்த முதல்வர்கள்/ நிர்வாகிகள், பெற்றோர்களின் கையொப்பம் பெற்று கருத்து கேட்பு கூட்டத்தில் ஏகமனதாக தெரிவிக்கப்படும் கருத்துக்களையும் மற்றும் கூட்டம் நடைபெற்றபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் ஆகியவற்றை தொகுத்து முதன்மைக்கல்வி அலுவலகத்தில் 10.11.2020 அன்று காலைல 10.00 மணிக்கு சமர்ப்பிக்கப்பட வேண்டும். சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையை தொகுத்து அரசுக்கு சமர்ப்பிக்கும் பொருட்டு பள்ளிக்கல்வி இயக்கத்திற்கு அனுப்பவேண்டியுள்ளது. மேலும், இக்கருத்து கேட்பு கூட்டத்தில் எடுக்கப்படும் கருத்துகளின் அடிப்படையிலேயே பள்ளிகள் திறப்பது குறித்து அரசால் முடிவெடுக்கப்படும் என்பதை நினைவில் கொண்டு எந்தவிதமான புகார்களுக்கும் இடமளிக்காவண்ணம் கூட்டத்தை நடத்திட அனைத்து பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது. *அரசு, அரசு உதவிபெறும், சுயநிதி, மெட்ரிக், சி.பி.எஸ்.சி., ஐ.சி.எஸ்.இ பள்ளிகளில் நடைபெறும் கருத்துக் கேட்பு கூட்டங்களை வட்டார வளமைய ஆசிரிய பயிற்றுனர்கள், வட்டார வளமைய மேற்பார்வையாளர்கள், வட்டாரக்கல்வி அலுவலர்கள், மாவட்டக்கல்வி அலுவலர்கள், மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர்கள் ஆகியோர் பார்வையிட்டு அறிக்கையினை வேலூர், முதன்மைக்கல்வி அலுவலருக்கு 09.11.2020 மாலை 5.00 மணிக்குள் அனுப்பும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.*
இணைப்பு : அரசு செய்திக்குறிப்பு *முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.*
பெறுநர்தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள்/ தாளர்கள்,அனைத்துவகை உயர்/ மேல்நிலைப்பள்ளிகள்(மெட்ரிக் மற்றும் சி.பி.எஸ்.இ, ஐ.சி.எஸ்.இ பள்ளிகள் உட்பட), வேலூர் மாவட்டம்நகல்கூடுதல் முதன்மைக்கல்வி அலுவலர், காட்பாடி வேலூர்.முதல்வர், மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர்‘ இராணிப்பேட்டை.மாவட்டக்கல்வி அலுவலர், வேலூர்அனைத்து வட்டாரக்கல்வி அலுவலர்கள், வேலூர் மாவட்டம்அனைத்து வட்டாரவள மைய மேற்பார்வையாளர்கள் (பொ), வேலூர் மாவட்டம்

Wednesday, 4 November 2020
Monday, 2 November 2020
Subscribe to:
Posts (Atom)