Monday, 31 May 2021
Saturday, 29 May 2021
*🌎🙋♂️பெற்றோரை* *இழந்த* *குழந்தைகள்:* *அரசு* *காக்கும்!* *- மாண்புமிகு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவிப்பு.* *கொரோனா தொற்றினால் உயிரிழந்த பெற்றோர்களின் குழந்தைகளைக் கண்டறிந்து, அவர்களுக்கு உதவிகளை வழங்கிட மாவட்ட அளவில், மாவட்ட சிறப்புப் பணிப் பிரிவு (Task Force) அமைக்கப்பட்டுள்ளது.* *பெற்றோரை இழந்து ஆதரவின்றித் தவிக்கும் குழந்தைகளின் பெயரில் தலா 5 இலட்சம் ரூபாய் வைப்பீடு செய்து, அந்தக் குழந்தைக்கு 18 வயது நிறைவடையும் போது வட்டியோடு வழங்கப்படும்.* *பட்டப் படிப்பு வரையிலான கல்வி - விடுதிக் கட்டணம் உள்ளிட்ட அனைத்து செலவினங்களையும் அரசே ஏற்கும்.* *கொரோனா நோய்த் தொற்றினால் தாய் அல்லது தந்தையை இழந்த குழந்தைகளோடு இருக்கும் தந்தை அல்லது தாய்க்கு உடனடி நிவாரணத் தொகையாக மூன்று இலட்சம் ரூபாய் வழங்கப்படும்.* *உறவினர் / பாதுகாவலரின் ஆதரவில் வளரும் குழந்தைகளுக்கு மாதந்தோறும் தலா 3 ஆயிரம் ரூபாய் உதவித் தொகை, அவர்கள் 18 வயது வரையில் வழங்கப்படும்.* *ஏற்கெனவே தாய் அல்லது தந்தையை இழந்து, தற்போது கொரோனா தொற்றினால் மற்றொரு பெற்றோரையும் இழந்த குழந்தைகளுக்கும் ரூபாய் 5 இலட்சம் வைப்பீடு செய்யப்படும்.* *அரசு இல்லங்கள், விடுதிகளில் முன்னுரிமை அடிப்படையில் தங்குவதற்கு இடம் வழங்கப்படும்; அரசு நலத்திட்டங்களிலும் முன்னுரிமை அளிக்கப்படும்.* *உதவித் தொகை, அவர்களது கல்வி மற்றும் வளர்ச்சி சிறப்புக் குழுவால் கண்காணிக்கப்படும்.*
Friday, 28 May 2021
கொரோனா தடுப்பூசி தயாரிக்கும் பணியை தமிழகத்திலே தொடங்க முடியும் என்று மாண்புமிகு முதல்வர் மு.க. ஸ்டாலின் முயற்சி எடுத்திருக்கிறார். இந்திய ஒன்றிய அரசிடம் தமிழக அரசு அனுமதி வழங்க முயற்சி செய்து கொண்டிருக்கிறது . செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள ஹெச்.எல்.எல் நிறுவனத்தை தமிழக அரசு ஏற்று நடத்தலாம் - மேனகா தடுப்பூசி நிறுவனத்தில் பணிபுரிந்தவர்... காணொளி
Wednesday, 26 May 2021
Tuesday, 25 May 2021
Sunday, 23 May 2021
Saturday, 22 May 2021
Friday, 21 May 2021
Wednesday, 19 May 2021
Tuesday, 18 May 2021
Monday, 17 May 2021
Sunday, 16 May 2021
தமிழகம் முழுவதும் தனியார் மருத்துவமனைகளுக்கும் ரெம்டெசிவிர் மருந்து விநியோகம் - தமிழக அரசு மாநகரங்களில் அரசு மருத்துவமனைகளில் மட்டுமே ரெம்டெசிவிர் மருந்து விற்பனை செய்யப்படுகிறது தனியார் மருத்துவர்கள் ரெம்டெசிவிர் மருந்தை அதிகம் பரிந்துரைப்பதால் கூட்டம் அலைமோதுகிறது. கூட்டம் கூடுவதை தவிர்க்க இனி தனியார் மருத்துவமனைகளிலும் ரெம்டெசிவிர் மருந்து கிடைக்க ஏற்பாடு சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் முடிவு
Saturday, 15 May 2021
திருத்தச் செய்தி பள்ளிக்கல்வி இயக்குனர் பணியிடம் அப்படியே தான் உள்ளது. பள்ளிக்கல்வி இயக்குனர். பதவிக்கு மேல் பதவியாகவும், பள்ளிக்கல்வி முதன்மை செயலாளர் பதவிக்கு கீழ் பதவியாகவும், பள்ளிக்கல்வி ஆணையர் என்ற IAS பணியிடம் கடந்த 2 ஆண்டுக்கு முன் உருவாக்கப்பட்டது. அதில் பணிபுரிந்த IAS மாறுதலில் சென்றதால் பள்ளிக்கல்வி இயக்குனர். கண்ணப்பன் கூடுதல் பொறுப்புவகித்தார். தற்போது IAS நந்தகுமார் போடப்பட்டுள்ளது. பள்ளிக்கல்வி இயக்குனர் பணியிடம் அப்படியே தான் உள்ளது. கண்ணப்பனை இன்னும் மாற்றவில்லை.
பள்ளிக் கல்வித் துறை இயக்குநருக்கான அனைத்து அதிகாரங்களும் பள்ளிக் கல்வித் துறை ஆணையரிடம் ஒப்படைப்பு!!! GO NO : 2027 , Date : 14.05.2021 பள்ளிக் கல்வித் துறையில் கடந்த 2019ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பள்ளிக் கல்வித் துறை ஆணையர் பணியிடம் புதிதாக உருவாக்கப்பட்டது. இதனையடுத்து பள்ளிக் கல்வித் துறையில் துறையின் முதன்மைச் செயலாளரை அடுத்து பள்ளிக் கல்வித் துறை ஆணையர் பொறுப்புக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று IAS அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டது. இதில் தற்போது பள்ளிக் கல்வி இயக்குநராக உள்ள கண்ணப்பனுக்கு பதிலாக IAS அதிகாரி நந்தகுமார் நியமிக்கப்பட்டுள்ளதாக உத்தரவில் தெரிவிக்கப்பட்டது இதனையடுத்து பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் பதவியிடம் அதற்குரிய அனைத்து அதிகாரங்களுடன் பள்ளிக் கல்வித் துறை ஆணையர் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இயக்குநர் பதவியிடத்தில் முதன் முறையாக IAS அதிகாரி நந்தகுமார் நியமிக்கப்பட்டுள்ளார்.. சுதந்திரத்திற்கு முன்பும் பின்பும் இயக்குநர் அந்தஸ்தில் IAS அதிகாரிகளே இல்லாத நிலையில் தற்போது முதன் முறையாக IAS அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் தற்போது பள்ளிக் கல்வித் துறை இயக்குநராக உள்ள கண்ணப்பனுக்கு வேறு பணியிடம் ஒதுக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
Friday, 14 May 2021
மாண்புமிகு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின்.... என்னைச் சந்திக்க வருவோர் பூங்கொத்து, பொன்னாடைகளைத் தவிர்க்க வேண்டும். அமைச்சர்களும் சட்டமன்ற உறுப்பினர்களும் ஆடம்பர வரவேற்பு நிகழ்வுகளைத் தவிர்த்திட வேண்டும். நம் செயல்களின் மூலமாக மக்கள் மனதில் இடம்பிடிப்போம்; நின்று நிலைபெறும் சாதனைகள் மூலமாக மக்களின் அன்பைப் பெறுவோம்!
ஆம்புலன்ஸ்களுக்கு கட்டணம் நிர்ணயம் - தமிழக அரசு கொரோனா நோயாளிகளை அழைத்துச் செல்ல சாதாரண ஆம்புலன்ஸ்களுக்கு முதல் 10 கிலோ மீட்டருக்கு ரூ.1500 கட்டணம் சாதாரண ஆம்புலன்ஸ்களில் 10 கிலோ மீட்டருக்கு பிறகு கிலோ மீட்டருக்கு ரூ. 25 கட்டணமாக நிர்ணயம் அடிப்படை உயிர் காக்கும் வசதிகளுடன் கூடிய ஆம்புலன்ஸ்களுக்கு முதல் 10 கிலோ மீட்டருக்கு ரூ.2000 கட்டணம் அடிப்படை உயிர் காக்கும் வசதிகளுடன் கூடிய ஆம்புலன்ஸ்களில் பத்து கிலோ மீட்டருக்கு பிறகு கிலோ மீட்டருக்கு ரூ. 50 கட்டணம் வெண்டிலேட்டர் வசதியுடன் கூடிய ஆம்புலன்ஸ்களுக்கு முதல் 10கிலோ மீட்டருக்கு ரூ.4000 கட்டணம்
Thursday, 13 May 2021
மாண்புமிகு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற சட்டமன்ற கட்சி தலைவர்கள் கூட்டத்தில் முடிவு. முழு ஊரடங்கை தீவிரப்படுத்த சட்டமன்ற கட்சி தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம் சட்டமன்ற கட்சி தலைவர்கள் கூட்டத்தில் மொத்தம் 5 தீர்மானங்கள் நிறைவேற்றம் கட்சி பொதுக்கூட்டங்கள் உள்ளிட்ட அரசியல் நிகழ்வுகளை நிறுத்த தீர்மானம் அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் அடங்கிய ஆலோசனை குழு அமைக்க முடிவு .. காணொளி.
Wednesday, 12 May 2021
Tuesday, 11 May 2021
Monday, 10 May 2021
Sunday, 9 May 2021
Saturday, 8 May 2021
Friday, 7 May 2021
Thursday, 6 May 2021
Wednesday, 5 May 2021
Tuesday, 4 May 2021
Monday, 3 May 2021
Sunday, 2 May 2021
Subscribe to:
Posts (Atom)